ஆளுநருக்கு எதிராக மீண்டும் ஒரு மனு.! அதிரடி காட்டும் தமிழக அரசு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள், அரசாணைகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி விரைவில் ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். இதற்கு கால வரம்பு நிர்ணயம் செய்யவேண்டும் என்று கோரி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் 198 பக்க அளவில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

இந்த நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேலும் ஒரு மனுவை நேற்று தாக்கல் செய்துள்ளது. அதாவது, "பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாமல் ஆளுநர் தலையிடுவதாக கூறி ரிட் மனுவை தமிழக அரசு தாக்கல் செய்துள்ளது. 

ஏற்கனவே மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவதாக ஆளுநருக்கு எதிராக ஒரு மனுவை தமிழக அரசு, உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள நிலையில், தற்போது சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை ஆளுநர் செய்வதாக குற்றம் சாட்டி வழக்குத் தொடர்ந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN government petition against governor RN ravi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->