விநாயகர் சதுர்த்தி: தோப்புக்கரணம் போட்டு பூஜை நடத்திய தமிழக முதல்வர்!  - Seithipunal
Seithipunal


இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு, தமிழகத்தில் விநாயகர் சிலை ஊர்வலம், தெருமுனைகளில் விநாயகர் சிலை வைத்து வழிபடுவது, விழா கொண்டாட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதித்து உள்ளது

நேற்று தமிழக முதல்வர் தெரிவித்துள்ள விநாயகர் சதுர்த்தி வாழ்த்து செய்தியில், "விநாயகரின் அவதாரத் திருநாளில், மக்கள் தங்கள் இல்லங்களில் களிமண்ணால் ஆன சிலைகளை வைத்து வழிபடுவர். ‘வினைகளின் வேரையே களைந்தெறியும் வல்லவர் விநாயகர்’ என பதினோறாம் திருமுறையில் பாடப்பட்டுள்ளது. விநாயகர் அருளால் இன்பம் பெருகி, நலமும் வளமும் பெற்று மகிழ்வுடன் மக்கள் வாழ வாழ்த்துகள்" என்று தெரிவித்து உள்ளார்.

இந்நிலையில், தமிழக முதல்வர் சேலம் திருவகவுண்டனூரில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை களி மண்ணால் செய்யப்பட்ட விநாயகர் சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்து, தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு குடும்பத்தினருடன் வழிபட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tn cm pray vinayagar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->