கோவில்பட்டி இராணுவ வீரர் நாயக் கருப்புசாமி குடும்பத்தில், ஒருவருக்கு அரசு வேலை.! தமிழக முதல்வர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "காஷ்மீரின் லடாக் பகுதியில், இந்திய ராணுவத்தின் ஆர்டிலெரி படைப்பிரிவில் பணியாற்றி வந்த, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம், திட்டாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் நாயக் கருப்பசாமி என்பவர், 18 .11 .2020 அன்று எதிர்பாராதவிதமாக வாகன விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து நான் மிகுந்த துயரம் அடைந்தேன்.

உயிரிழந்த ராணுவ வீரர் நாயக் கருப்புசாமி அவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். 

மேலும் ராணுவ வீரர் நாயக் கருப்புசாமி அவர்களின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவும், தமிழ்நாடு அரசு சார்பில் மரியாதை செலுத்தவும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜ் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த சம்பவத்தில் உயிரிழந்த ராணுவ வீரர் கருப்புசாமி அவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்." என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN CM mourning to kovilpatty army man death


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->