தமிழக பட்ஜெட் 2020 : வேலையில்லா இளைஞர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்ட தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. இதில் நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் 9வது முறையாக 2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார்.

சென்னையில் மாநில திறன் பயிற்சி நிலையம் உருவாக்கப்படும். 

சென்னை கோட்டூர்புரத்தில் புதிதாக பொருளியல் பள்ளி அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 

முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தில் ரூபாய் 1033 கோடி ஒதுக்கீடு.

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படும். 

மாதாவரம் - சோழிங்கநல்லூர், மாதாவரம- கோயம்பேடு இடையே 52 கிலோ மீட்டர் தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டம். 

பள்ளி கல்வித்துறைக்கு ரூபாய் 34181 கோடி ஒதுக்கீடு. 

கடந்த ஆண்டை விட கூடுதலாக 5 ஆயிரம் கோடியை பள்ளிக்கல்வி துறைக்கு ஒதுக்கீடு. 

தொழில் மேம்பாட்டுக் கடன் நிதி திட்டத்தின்கீழ் வட்டி மானியமும் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்வு.

வேலையில்லா இளைஞர்களுக்கான முதலீட்டு வரம்பு 10 லட்சத்திலிருந்து 15 லட்சமாக உயர்வு. 

தொழில் முனைவோருக்கான புத்தாக்க திட்டத்தின் கீழ் 500 புதிய நிறுவனங்கள் உருவாக்கப்படும்.

 சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகரில் ரூபாய் 76 கோடி செலவில் மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்படும். 

தமிழக மின்சாரத் துறைக்கு ரூபாய் 2011.58 கோடி ஒதுக்கீடு.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

tn budget 2020 for unemployed young man


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->