மூன்று நாள் ஆச்சு... இது திமுக அரசின் மெத்தனப்போக்கு.. ஆசிரியர்கள் போராட்டத்திற்கு தமிழக பாஜக ஆதரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் சம வேலை சம ஊதியம் வழங்க கோரி சென்னையில் உள்ள பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் கடந்த டிசம்பர் 27ஆம் தேதி முதல் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தத் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் 2000க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் குடும்பத்துடன் பங்கேற்றுள்ளனர். இதன் காரணமாக 200-க்கும் மேற்பட்ட போலீசார் பள்ளி கல்வித்துறை வளாகத்தில் குவிக்கப்பட்டுள்ளனர். இடைநிலை ஆசிரியர்களின் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் இன்று 79 பேர் மயக்கம் அடைந்த நிலையில் சிகிச்சைகளாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் "ஊதிய முரண்பாட்டை கலைய வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னை டி.பி.ஐ வளாகத்தில் செவ்வாய்க்கிழமை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அவர்களது கோரிக்கைகளுக்கு செவிசாய்க்க திறனற்ற திமுக அரசு மறுக்கிறது. போராட்டம் தொடங்கி மூன்று நாட்கள் கடந்தும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் இடைநிலை ஆசிரியர்களை சந்திக்காமல் இருப்பது இந்த திறனற்ற திமுக அரசு உடைய மெத்தனப் போக்கின் வெளிப்பாடு.

தமிழக பாஜகவின் மாநில துணைத்தலைவர் துரைசாமி, நாராயண திருப்பதி மற்றும் மாநில செயலாளர் திருமதி வசுமதி ஆகியோர் இன்று இடைநிலை ஆசிரியர்களை சந்தித்து அவர்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என பதிவிட்டுள்ளார். இடைநிலை ஆசிரியர்கள் நடத்தும் போராட்டத்திற்கு முதல் அரசியல் கட்சியாக தமிழக பாஜக ஆதரவு தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN BJP supports school teachers hunger strike


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->