வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு விவகாரம் | முதல்வர் ஸ்டாலின் விளக்கம்! - Seithipunal
Seithipunal


வன்னியர்களுக்கான 10.5% உள் ஒதுக்கீடு விவகாரத்தில் பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு மேலும் ஆறு மாத அவகாச கால அவகாசம் தமிழக அரசு வழங்கியிருந்தது.

இதனை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் நேற்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக சிறப்பு தீர்மானம் கொண்டு வர சபாநாயகர் இடம் அனுமதி கோரப்பட்டிருந்தது.

இதற்கு சபாநாயகர் அனுமதி வழக்காததால், நேற்று பாட்டாளி மக்கள் கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்திருந்தனர்.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் ஜி கே மணி, இன்று வன்னியர்களுக்கு 10.5 உள் ஒதுக்கீடு விவகாரம் தொடர்பாகவும், பிற்படுத்தப்பட்ட ஆணையத்திற்கு மேலும் ஆறு மாத கால அவகாசம் வழங்கப்பட்டது குறித்தும் சிறப்பு கவனயீர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார்.

மேலும், ஆணையத்திற்கு ஒரு மாத கால அவகாசம் வழங்கினால் போததா? எதற்கு ஆறு மாத காலம் நீட்டிப்பு செய்யப்பட்டது என்ற ஜிகே மணி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின்,  வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நாங்களும் முயற்சி செய்து கொண்டு வருகிறோம்.

வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீடு குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் கால அவகாசம் ஆறு மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்னியர் இட ஒதுக்கீடு குறித்து தேர்தல் தேதி அறிவிக்கும் போது அவசர அவசரமாக கடந்த ஆட்சியில் அறிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற பரிந்துரை அடிப்படையில் தான் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஆணையம் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் தான் ஆறு மாதம் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்று பதில் அளித்தார்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Assembly Vanniyar Reservation CM Stalin PMK MLA


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->