ஆந்திராவில் "தமிழர் வரலாறு" ஆய்வுக்கு தொல்லியல் துறை அனுமதி!! - Seithipunal
Seithipunal


கிபி 10ம் நூற்றாண்டில் தமிழகத்தை ஆண்ட சோழர்கள் அப்போதைய ஆந்திராவை ஆண்ட கீழை சாளுக்கியர்களுடனும், கர்நாடகாவை ஆண்ட மேலை சாளுக்கியர்களுடனும் போரிட்டு அப்பகுதிகளையும் சோழர்களின் ஆட்சியின் கீழ் கொண்டு வந்தனர். அதன் பிறகு கீழை சாளுக்கியளர்களுடன் திருமண உறவு கொண்ட சோழர்கள் அவர்களிடமே ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தனர்.

அதன் பிறகு சோழர்கள் பல்வேறு கோயில்கள் உள்ளிட்ட கட்டுமான பணிகளையும், நலத்திட்ட உதவிகளையும் செய்தனர். இது தொடர்பான சோழர்களின் கல்வெட்டு ஆந்திர மாநிலம் வேங்கி உள்ளிட்ட பகுதிகளில் அதிகமாக காணப்படுகிறது. 

இந்த வரலாற்று சான்றுகளை சேகரிக்கும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறை மத்திய தொழில்துறையிடம் அனுமதி கேட்டிருந்தது. அதற்கு மத்திய தொல்லியல் துறையும் அனுமதி வழங்கியுள்ளது. மேலும் கடல்வழி பயணம் மேற்கொண்டு ஆதிக்கம் செலுத்திய சோழர்களின் சான்றிதழ் பாளுரில் அதிகமாக காணப்படுவதால் அந்தப் பகுதியிலும் அகழாய்வு மேற்கொள்ள தமிழ்நாடு தொல்லியல் துறைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இந்த அகழாய்வுக்கு ஆந்திர மாநில அரசும் ஒப்புதல் அளித்துள்ளதால் விரைவில் ஹைதராபாத் மத்திய பல்கலை கழகமும், தமிழ்நாடு தொல்லியல் துறையும் இணைந்து அகழாய்வு பணிகளை தொடங்க திட்டமிட்டுள்ளன. இந்த ஆய்வின் மூலம் கிடைக்கும் சான்றுகளை அறிவியல் முறையிலான தரவுகளுடன் தமிழர்களின் வரலாற்றை மீட்டெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

இதேபோன்று கர்நாடக மாநிலம் தளக்காடு, கேரள மாநில முசிறி உள்ளிட்ட பகுதிகளிலும் அகழாய்வு மேற்கொள்ள அந்தந்த மாநில அரசுகள் மற்றும் மத்திய தொல்லியல் துறை இடம் தமிழ்நாடு தொல்லியல் துறை அனுமதி கோரி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tn Archeology allowed to explore Tamil History in Andhra Pradesh


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->