திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா: தேர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை, அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருநாள் அடுத்த மாதம் 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 26 ஆம் தேதி மகா தீப திருவிழாவுடன் நிறைவு பெறுகிறது. 

அதனை ஒட்டி தீபத் திருவிழா பூர்வாங்க பணிகளில் தொடக்கமாக பந்தக்கால் நட்டு வீதி உலாவுக்கு பயன்படுத்தப்படும் வாகனங்கள் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் 7 நாளன்று தீப திருவிழா உற்சவர் மாடவீதியில் பவனி வரும் பஞ்சரதங்களை சீரமைத்து உறுதி தன்மையை சரிப்பார்க்கும் பணிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வருகிறது. 

மகாரதம், பராசக்தி அம்மன் தேர், சண்டிகேஸ்வரர் தேர் போன்றவை சீரமைக்கப்படுகிறது. அருணாச்சலேஸ்வரர் பவனி வரும் மகாரதம் உயரத்திலும் எடையிலும் மிகப்பெரிய அளவில் உள்ளது. 

இந்த மகாராதத்தின் அச்சு, பீடம், விதானம் போன்றவற்றில் உள்ள பழுதுகளை ஆய்வு செய்து சீரமைக்க கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 

இது போன்ற பணிகளை அடுத்த மாதம் முதல் வாரத்திற்குள் நிறைவு படுத்தி பொதுப்பணி துறையின் உறுதிச் சான்று பெற வேண்டும் என கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சீரமைப்பு பணியின் போது மகாரதத்தின் மீது அமைக்கப்பட்டு இருந்த பாதுகாப்பு தகடுகள் அகற்றப்பட்டு பணிகள் நடைபெறுவதால் 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார் சுழற்சி முறையில் பணியில் இருந்து வருகின்றனர். தீபத்திருவிழா முடியும் வரை இந்த பாதுகாப்பு தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai karthigai deepam festival police security


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->