சர்க்கரை ஆலை மூடல்: 12 ஏக்கர் கரும்பை டிராக்டர் ஓட்டி அழித்த விவசாயி! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை, வழூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்கரபாணி. இவர் கடந்த சில வருடங்களாக 12 ஏக்கரில் கரும்பு விவசாயம் செய்து அதனை அறுவடை செய்து செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு அனுப்பி வந்தார். 

கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை இயந்திரம் வேலை செய்யாத காரணத்தினால் ஆலை மூடப்பட்டதாக தெரிகிறது. 

இதனால் செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட கிராமங்களில் இருந்து கரும்பை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. 

கடந்த ஆண்டு சக்கரபாணி 12 ஏக்கர் நிலத்திலும் கரும்பு அறுவடை செய்து அதனை செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை ஆலைக்கு எடுத்துச் சென்றார். 

அங்கு எந்திரம் இயங்காததால் அதனை செஞ்சியில் உள்ள ஆலைக்கு எடுத்துச் செல்லுமாறு நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் கூலி ஆட்களை வைத்து கரும்பை வெட்டி செஞ்சியில் உள்ள ஆலைக்கு அனுப்பியதால் பயிரிட்ட செலவு கூட தனக்கு கிடைக்கவில்லை என சக்கரபாணி தெரிவித்துள்ளார். 

இந்நிலையில் மீண்டும் அவர் கரும்பு பயிரிட்டு, வளர்ந்து அறுவடைக்கு தயாரானது. ஆனால் செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இன்னும் தொடங்காததால் கரும்பை வெட்டி செஞ்சியில் உள்ள ஆலைக்கு அனுப்பி வைத்தால் நஷ்டம் தான் ஏற்படும் என எண்ணி கரும்பு பயிரை அளிக்க முடிவு செய்தார். 

அதன்படி சக்கரபாணி விளையும் நிலையில் இருந்த கரும்பை  டிராக்டர் மூலம் அழித்து கரும்பு பயிர்களை வயலிலேயே விட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Farmer destroyed 12 acres sugarcane with tractor


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->