5 ரூபாய் காயினை விழுங்கிய சிறுமி.. அரசு மருத்துவமனை மருத்துவர்களின் நெகிழ்ச்சி செயல்..!! - Seithipunal
Seithipunal


ரூ.5 நாணயத்தை சிறுமி விழுங்கிவிட்டு அவதிப்பட்ட நிலையில், அதனை வெற்றிகரமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவர்கள் வெளியே எடுத்துள்ளனர். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தண்டராம்பட்டு குபேரபட்டினம் கிராமத்தை சார்ந்தவர் போஜன். இவர் சென்னையில் ஜே.சி.பி இயந்திர ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சுமதி. இவர் விவசாய கூலித்தொழிலாளி ஆவார். இவர்கள் இருவரின் மூன்றரை வயது மகள் தனுஷியா. சிறுமி வீட்டில் கடந்த வியாழக்கிழமை விளையாடிக்கொண்டு இருக்கையில், 5 ரூபாய் நாணயத்தை விழுங்கியுள்ளார். 

இதனையடுத்து, சிறுமி தொண்டையில் சிக்கிய நாணயத்தால் வலி ஏற்பட்டு அழவே, தாயிடம் விஷயத்தை சைகையில் கூறியுள்ளார். பதறிப்போன சுமதி, தனது மகளை திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து வந்துள்ளார்.

மருத்துவமனையில் இருந்த காது, மூக்கு மற்றும் தொண்டை சிறப்பு மருத்துவர்கள் பொ. சிந்துமதி மற்றும் எம்.ஆர்.கே ராஜ செல்வம் எக்ஸ்ரே மூலமாக பரிசோதனை செய்கையில் சிறுமி நாணயத்தை விழுங்கியது தெரியவந்துள்ளது. இது உணவு செல்லும் உணவுக்குழாயில் சிக்கியுள்ளதும் கண்டறியப்பட்டது. சிறுமியின் வயிற்றில் தண்ணீர் மற்றும் உணவு இருந்ததால் உடனடியாக மருத்துவர்களால் சிகிச்சையை தொடங்க இயலவில்லை.

சுமார் 5 மணிநேரம் சென்ற பின்னர் சிறுமி அறுவை சிகிச்சை பிரிவுக்கு அழைத்து செல்லப்பட்டு, மயக்க மருந்து செலுத்தப்பட்டு 30 நிமிடத்திற்கு பின்னர் உணவுக்குழாயில் சிக்கியிருந்த 5 ரூபாய் நாணயத்தை மருத்துவர்கள் வெளியே எடுத்தனர். மேலும், குழந்தைகளை வளர்க்கும் பெற்றோர் கவனமாக இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை கூறுகின்றனர்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tiruvannamalai Child Eat Rs 5 Coin Tiruvannamalai Govt Hospital Doctors Removed Successfully


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->