திருநெல்வேலியில் போட்டியா? சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விளக்கம்!! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து தீவிரமாக ஆலோசனை நடத்தி வருகின்றன. 

இந்நிலையில் கடந்த ஆண்டு அ.தி.மு.க கூட்டணியில் தேர்தலை சந்தித்த சமத்துவ மக்கள் கட்சி வருகின்ற மக்களவைத் தேர்தலில் எந்த அணியில் இடம் பெறும் என கேள்வி எழுந்துள்ளது. 

இது குறித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பேசியிருப்பதாவது, 2026 சட்டப்பேரவை தேர்தலை சந்திப்பதற்கு மக்களவைத் தேர்தல் கூட்டணி முக்கியமான ஒன்று. 

அ.தி.மு.கவுடன் பேச்சு வார்த்தை நடைபெற்றுள்ளது. பா.ஜ.க பேச்சு வார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக இன்னும் எந்த ஒரு முடிவும் எடுக்கப்படவில்லை. 

விரைவில் கூட்டணி குறித்தும் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Competition  People Party leader Sarathkumar explanation


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->