சாத்தான்குளம் குற்ற சம்பவம் விவகாரத்தில், அடுத்தது கைதாகும் அதிகாரிகள்.. கொண்டாடும் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சாத்தான்குளத்தில் செல்போன்கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பெண்ணிக்ஸ் காவல்துறையினரால் கொலை செய்யப்பட்டனர். இந்த விஷயம் விஸ்வரூபம் எடுத்து பெரும் கண்டனத்திற்கு உள்ளாகியது. மேலும், இருவரின் இழப்பிற்கு நீதி கேட்டு போராட்டங்கள் நடைபெற்று வந்தது. 

இந்த வழக்கு தொடர்பான விசாரணையை மதுரை நீதிமன்றம் விசாரணை செய்து வந்த நிலையில், காவல் துறை அதிகாரிகள் ஒருமித்த கருத்தால் நீதிபதியை அவதூறு பேசி சர்ச்சையை அதிகரித்தனர். இதனை விசாரணை வாக்குமூலத்தில் நீதிபதியும் குறித்துக்கொண்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை சி.பி.சி.ஐ.டி வசம் மாற்றப்பட்டுள்ளது. 

இதனையடுத்து சி.பி.சி.ஐ.டி காவல் துறை அதிகாரிகள், இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட அதிகாரிகளான ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவல் அதிகாரிகள் முருகன் என மொத்தமாக ஐந்து பேரை தற்போது வரை கைது செய்துள்ளனர். அடுத்தடுத்து இந்த குற்றத்தில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளது, அப்பகுதி மக்களிடையே நீதி கிடைக்கும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் உள்ளூர் மக்கள் பட்டாசு வெடித்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. 

எத்தனையோ காவல் துறை அதிகாரிகள் மக்களுக்கு உதவி செய்து, மக்களுடன் நண்பராக வாழ்ந்து வரும் நிலையில், இது போன்ற குற்ற சம்பவங்களால் ஒட்டுமொத்த காவல் துறைக்கும் களங்கம் ஏற்படுவது தான் வருத்தத்தை அளிக்கிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sathankulam Murder Case CBCID Arrest


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->