டிக் டாக், முகநூலில் பிரபலமான பெண்களை குறிவைத்து சினிமா ஆசைகாட்டி, ஆபாச படமெடுத்து பணம் பறிப்பு.! - Seithipunal
Seithipunal


முகநூல், டிக் டாக் செயலில் பிரபலமான பெண்களை குறிவைத்து, சினிமா ஆசை காண்பித்து ஆபாச படமெடுத்து மிரட்டி பணம் பறித்த காமுகன் கைது செய்யப்பட்டுள்ளான்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியில் உள்ள விடுதிக்கு ஒரே நபர், அவ்வப்போது வெவ்வேறு பெண்களுடன் வந்து செல்வதாகவும், இவர் இரவு வேளைகளில் துப்பாக்கியுடன் சுற்றி தெரிவதாகவும் காவல் துறையினருக்கு தகவல் வந்துள்ளது. 

இதனையடுத்து, சம்பந்தப்பட்ட விடுதிக்கு சென்று மர்ம நபரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த நபர் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பகுதியை சார்ந்த இமானுவேல் ராஜா என்கிற சக்தி என்பது தெரியவந்தது. 

காமுகன் சக்தி டிக் டாக், முகநூல் செயலியில் பிரபலமாக இருக்கும் பெண்களை குறிவைத்து, அவர்களிடம் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக இராமேஸ்வரம் விடுதிக்கு அழைத்து செல்வதும், அங்கு அவர்களை மிரட்டி ஆபாச படமெடுத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வந்ததும் உறுதியானது. 

சக்தியின் அலைபேசியை கைப்பற்றி ஆய்வு செய்கையில், அவனது அலைபேசியில் ஆபாச படங்கள் இருப்பது உறுதியானது. அவனிடம் இருந்து 10 க்கும் மேற்பட்ட ஏ.டி.எம் அட்டைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இராமேஸ்வரம் காவல் துறையினர் அவனிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Kovilpatti Native Culprit Sakthi Abused Woman Capture Porn Video Interest of Cinema


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->