அத்துமீற வந்தவனுக்கு பத்ரகாளியாக மாறி பதில் சொன்ன பெண்.. விடுதலை செய்த காவல் கண்காணிப்பாளர்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் அல்லிமேடு கிராமத்தைச் சார்ந்த பெண்மணி கவுதமி. இவர் தாய், தந்தையை இழந்து உறவினர் வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில், சம்பவத்தன்று இயற்கை உபாதையை கழிக்க சென்றுள்ளார். 

இதன்போது, கௌதமியை பின்தொடர்ந்து சென்ற உறவினர் அஜித் என்பவன், பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளான். உயிரை காப்பாற்ற எண்ணிய பெண்மணி, போதையில் இருந்த அஜித்தின் கத்தியை பிடுங்கி, அஜித்தை குத்தி கொலை  செய்துள்ளார். 

இதனையடுத்து இரத்தம் நிறைந்த கத்தியுடன் சோழவரம் காவல் நிலையத்திற்கு சென்ற கௌதமி, விஷயத்தை கூறி சரணடைந்துள்ளார். அத்துமீறிய உறவினரிடம் இருந்து தற்காத்துக் கொள்வதற்காக அவரை கொலை செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், அஜித்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் தொடர்பாக விசாரணை செய்து, பெண் தனது பாதுகாப்பிற்காக கொலை செய்துள்ளதால், அதனை கொலையாக கருதாமல் தற்காப்புக்காக நடத்தப்பட்ட கொலை என உறுதி செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் கவுதமியை விடுதலை செய்துள்ளார். 

மேலும், இந்த விஷயம் தொடர்பாக நீதிமன்றத்தில் விரிவான பதில் தாக்கல் செய்து, அஜித்தின் மரண வழக்கு முடித்து வைக்கப்படும் என்றும் காவல் கண்காணிப்பாளர் அரவிந்தன் தெரிவித்துள்ளார். பெண்களுக்கு ஆதரவாக இங்கு பல சட்டங்களும் உள்ளது. பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், பாதுகாப்பு கருதி கொலை செய்தால் அது குற்றமற்றது என்றும் ஏற்கனவே சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளது. வாழும் பத்ரகாளியாக மாறிய கவுதமிக்கும், அவரை விடுதலை செய்ய உதவியாக இருந்த காவல் அதிகாரிக்கும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur girl Production Murder Sexual Torture Relation Culprit


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->