நயவஞ்சக காதலனை நம்பி சென்ற பெண், 4 நாட்களில் தெருவில் நின்ற அவலம்.. கம்பிநீட்டிய "காதோல்" கணவன்.! - Seithipunal
Seithipunal


காதல் போர்வையில் பெண்ணை ஏமாற்றி, நாடகக்காதல் திருமணம் செய்து நான்கு நாட்களில் காமுக காதலன் கம்பி நீட்டிய சோகம் அரங்கேறியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரும்பாக்கம் கிராமத்தை சார்ந்தவர் கீர்த்திபா (வயது 19). கீர்த்திபா கனகம்மாசத்திரம் பகுதியில் உள்ள ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இதே நிறுவனத்தில் சிறுவானூர் கிராமத்தை சார்ந்த ஜெபஸ்டின் (வயது 21) என்பவன் பணியாற்றி வந்துள்ளான். 

ஜெபஸ்டின் கீர்திபாவை காதல் வலையில் வீழ்த்தியாக கூறப்படுகிறது. இதனையடுத்து நயவஞ்சக காதலில் விழுந்த கீர்திபாவும் ஜெபஸ்டினை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், கீர்த்திபாவிற்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுத்த பெற்றோர் வரன் பார்த்துள்ளனர். 

இந்த விஷயத்தை நாடக காதலன் ஜெபஸ்டினிடம் தெரிவிக்கவே, அவனும் இருவரும் திருமணம் செய்துகொள்ளலாம் என்று கூறியுள்ளான். காதலனை மலைபோல நம்பியிருந்த கீர்த்திபா, கடந்த 13 ஆம் தேதி திருப்பாச்சூரில் உள்ள கோவிலில் காதலனை கரம்பிடித்துள்ளார். 

திருமணத்திற்கு பின்னர் காதல் ஜோடி புட்லூர் பகுதியில் இருக்கும் ஜெபஸ்டினின் பாட்டி வீட்டில் கணவன் - மனைவியாக வாழ்க்கையை தொடங்கியுள்ளனர். இந்நிலையில், ஜெபஸ்டின் கடந்த நாட்களாக வீட்டிற்கு வராமல் இருந்த நிலையில், அவனது பெற்றோரிடம் கேட்டும் உரிய தகவல் இல்லை. 

இதனால் மனமுடைந்துபோன கீர்த்திபா கணவரை தனக்கு தெரிந்த இடங்களில் தேடியலையவே, ஜெபஸ்டின் கிடைக்கவில்லை என்பதால் அங்குள்ள திருவள்ளுர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மேலும், காணாமல் போன தனது கணவரை கண்டறிந்து தன்னுடன் சேர்த்து வைக்குமாறும் புகாரில் கூறியுள்ளார். 

இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, காதல் மனைவியை தவிக்கவிட்டு சென்ற ஜெபஸ்டினை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகம் மட்டுமல்லாது இந்திய அளவிலும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Arumbakkam girl Keerthiba Drama Love Marriage His Love boy Jebastin Escaped


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->