தேனியில் கைது செய்யப்பட்ட தலைமை காவலர்! ஒரு காவலர் செய்யுற வேலையா இது?!  - Seithipunal
Seithipunal


தேனி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்த வழக்கில் ஆயுதப்படை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி, தேனி மாவட்டத்தை சேர்ந்த சீனியப்பன் மகன் கணேசன் என்பவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த 1540 கிலோ எடையுள்ள தடைசெய்யப்பட்ட புகையிலை குட்கா பொருட்களை தேனி காவல்நிலைய போலீசார் பறிமுதல் செய்தனர்.

போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி இந்த குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த புகையிலை பொருட்களை கடத்துவதற்கு பயன்படுத்திய கார் ஒன்றும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்த கணேசன் அவருக்கு உடந்தையாக இருந்த பாலகிருஷ்ணன் மகன் மணிகண்டன், சின்னமனூர் செல்லத்துரை மகன் ராஜகுரு உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர்.

இந்நிலையில், கைது செய்யப்பட்டவர்களில் ராஜகுரு அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆயுதப்படை மோப்பநாய் பராமரிப்பு பிரிவு தலைமை காவலர் பிரசன்னா என்பவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

theni police arrested fot gutka case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->