தேனி மக்களவை | ஓபிஎஸ் மகன் வெற்றி செல்லாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ.பி. ரவீந்திரநாத், தேனி மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றியை செல்லாது என்று, சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.

தேனி மக்களவைத் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிட்ட ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத், 76 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தார்.

இந்த வெற்றியை செல்லாது என்று அறிவிக்கக் கோரி, அதே தொகுதியை சேர்ந்த வாக்காளர் மிலானி (திமுகவை சேர்ந்தவர்), சென்னை உயர்நீதிமன்றத்தில்வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கில் நேரில் ஆஜரான ரவீந்திரநாத், தன மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து சாட்சியம் அளித்தார். மேலும் இந்த வழக்கில் தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

வழக்கை தொடர்ந்த மிலானி தரப்பிலும் வாதங்கள் எடுத்து வைக்கப்பட்டன, அதில் குறிப்பாக ரவீந்திரநாத் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாகவும், சொத்து விவரங்களை மறைத்ததாகவும் குற்றம் சாட்டி வாதம் வைக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில் இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, ஓ.பி. ரவீந்திரநாத், தேனி மக்களவைத் தொகுதியில் பெற்ற வெற்றி செல்லாது என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

தீர்ப்புக்குப்பின் ரவீந்திரநாத் கோரிக்கையை ஏற்று, அடுத்த முப்பது நாளுக்கு இந்த தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படுவதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Theni MP OPR Election Victory dismissed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->