வாய்க்கால் அமைக்கும் பணி..அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார் !
The work of constructing roads and bridges Minister Namasivayam has inaugurated it
வி. மணவெளியில் ரூ. 42 லட்சம் செலவில் வாய்க்கால் அமைக்கும் பணியை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா தலைமையில் அமைச்சர் நமச்சிவாயம் தொடங்கி வைத்தார் !
புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்றத் தொகுதி, வி. மணவெளி கிராமத்தில் திரிவேணி நகர் செல்லும் பாதை முன் முதல் ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் ஆலயம் வரை ‘யு’ வடிவ வாய்க்கால் அமைக்க ரூ. 42 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பொதுப்பணித் துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு மூலம் மேற்கொள்ளப்படும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.
தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா. சிவா அவர்கள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கலந்து கொண்டு, வாய்க்கால் அமைக்கும் பணியினை பூஜை செய்து தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித் துறை சாலைகள் மற்றும் கட்டிடங்கள் வடக்கு பிரிவு செயற்பொறியாளர் சந்திரகுமார், உதவிப் பொறியாளர் நடராஜன், இளநிலைப் பொறியாளர் கார்த்திக் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
English Summary
The work of constructing roads and bridges Minister Namasivayam has inaugurated it