கேக் கொடுத்து மூதாட்டியிடம் நகை திருடிய பெண்.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


பேருந்தில் பயணம் செய்தபோது கேக் கொடுத்து மூதாட்டியிடம் நகை திருடிய பெண் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம் ராயப்பன்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள். இவரது மனைவி செண்பகவள்ளி(61). இவர் கோவையில் உள்ள பேரனை பார்ப்பதற்காக சென்றுள்ளார். பின்பு பேரனை பார்த்துவிட்டு அங்கிருந்து பேருந்தில் தேனிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுது அவரது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பெண் ஒருவர், சாப்பிடுவதற்காக மூதாட்டிக்கு கேக் கொடுத்துள்ளார். இதை வாங்கி சாப்பிட்ட மூதாட்டி சிறிது நேரத்திலேயே மயங்கி உள்ளார். இதையடுத்து தேனி புதிய பேருந்து நிலையம் அருகே பேருந்து வந்த போது மூதாட்டிக்கு மயக்கம் தெளிந்து உள்ளது.

இந்நிலையில் மூதாட்டி கண்விழித்து பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்திருந்த, மூன்று பவுன் செயின் காணாமல் போனது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து மூதாட்டி இது குறித்து தனது மகள் சித்ராவிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சித்ரா தேனி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், கேக் கொடுத்து நகையை திருடி சென்ற மர்ம பெண் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The woman who stole the jewelry from the old lady by giving her a cake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->