குடிப்பழக்கம்... தினமும் தகராறு.! கணவரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற மனைவி..! - Seithipunal
Seithipunal


கோவை மாவட்டத்தில் குடிபோதையில் தொடர்ந்து தகராறு செய்த கணவரின் தலையில் கல்லைப்போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் நாயக்கனூர் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி செல்வராஜ் (60). இவருடைய மனைவி கலாமணி (55). இந்நிலையில் செல்வராஜிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் மது அருந்திவிட்டு வந்து, மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதையடுத்து நேற்று இரவும் வழக்கம் போல் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த செல்வராஜ், மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கலாமணி கணவரிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். இருப்பினும், செல்வராஜ் வீட்டில் இருந்து கலாமணியை தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கலாமணி வெளியே கிடந்த கல்லை எடுத்து செல்வராஜ் தலையில் போட்டுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த செல்வராஜை அக்கம் பக்கத்தினர், காவல்துறை மற்றும் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, ஆம்புலன்ஸில் வந்த மருத்துவ உதவியாளர் செல்வராஜை பரிசோதனை செய்ததில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் செல்வராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கலாமணியை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The wife who murder her husband by throwing a stone on his head in kovai


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->