பழமையான கட்டிடம் இடிந்து விபத்து.. காலவர் பரிதாப பலி..! - Seithipunal
Seithipunal


பழைய கட்டிடம் இடிந்து விழுந்து காவலர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகர் விளக்குத்தூண் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து மகன் சரவணன் ஆகிய இருவரும் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர் அப்போது கீழ வெளி பகுதியில் இருசக்கர வாகனத்தில் உள்ள தேநீர்க் கடையில் மக்கள் கூட்டமாக நின்றனர்.

இதனை கண்டவர்கள் அங்கிருந்து மக்களை கலைந்து செல்லும்படி கூறிக் கொண்டிருக்கும் பொழுது அங்கிருந்த 110 ஆண்டுகள் பழமையான கட்டிடம் திடீரென இடிந்து விழுந்தது.
இந்த விபத்தில் சிக்கிய சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மற்றொரு காவலரான மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கட்டிடத்தின் உரிமையாளர் வாடகைதாரர் உள்ளிட்டோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மதுரை மாநகரின் பல பகுதிகளில் இது போன்ற பழமையான கட்டிடங்கள் உள்ளதாகவும் அது அவற்றின் தன்மை குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை நடத்த வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The oldest building collapsed in the crash


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->