மல்டி மாடல் பஸ் ஸ்டாண்ட் மாறப்போகும் கிளாம்பாக்கம்! கிளம்பாக்கம் சென்ட்ரல்? - Seithipunal
Seithipunal


 சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்பட இருக்கும்  ரயில் நிலையம் இந்த வருட இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பாக்கப்படுகிறது . அதற்கு இடையில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் இடையிலான பறக்கும் நடை பாலமும் கட்டி முடிக்கப்படுள்ளதாக அறிவிப்பு வெளியாகி  உள்ளது.

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) மல்டி மாடல் ஹப்களை உருவாக்க திட்டமிட்டுள்ளதால், 2025 ஆம் ஆண்டில் கட்டம்-2 மெட்ரோ ரயில்கள் இயங்கத் தொடங்கும் போது பயணிகள் மிக எளிதாக பயணம் செய்ய முடியும் என்று கூறப்படுகிறது .​​பயணிகள் மெட்ரோ ரயில்களில் இருந்து MTC பேருந்துகள், புறநகர் மற்றும் MRTS ரயில்கள் அல்லது மெட்ரோ ரயில் கட்டம்-1 வழித்தடங்களுக்கு தடையின்றி நொடிகளில் மாறி பயணம் செய்யலாம் . 23 இடங்களில் இந்த வசதி வர உள்ளது.

மல்டி மாடல் திட்டத்தின் அடிப்படையில் சர்வதேச நாடுகளில் உள்ள இந்த வசதி சென்னையில் கொண்டு வரப்பட உள்ளது. இந்த மையங்கள் 116.1 கிமீ கட்டம்-2 நெட்வொர்க்கின் ஒரு பகுதியாக திட்டமிடப்பட்டுள்ளது மற்றும் 2025 முதல் 2028 வரை இந்த மெட்ரோ பணிகள் நடக்கும். திருவான்மியூர் மற்றும் திருமயிலையில் மெட்ரோ ரயில் நிலையங்கள் எம்ஆர்டிஎஸ் நிலையங்களுடனும், மந்தவெளி மற்றும் மாதவரத்தில் மெட்ரோ ரயில் நிலையங்கள் பேருந்து நிலையங்களுடனும் இணைக்கப்படும். மாதவரம் முதல் சிறுசேரி சிப்காட் வரையிலான 45.4 கிமீ மெட்ரோவில் இது போல ஒன்பது மையங்கள் அமைக்கப்படும். திருவான்மியூர், அடையாறு பேருந்து நிலையம், மந்தைவெளி, திருமயிலை, சேத்துப்பட்டு, அயனாவரம், பெரம்பூர் புறநகர் பகுதிகள், கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்குகள் ஆகிய இடங்களில் அவை வரும்.

சென்னை கிளாம்பாக்கம்  மல்டி மாடல் பேருந்து நிலையங்களில் ஒன்றாக மாறும் வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது . ஒரு பக்கம் இருக்க  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையத்தை அமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. இதற்காக தளம் அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதற்கான புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளது. சென்னை கிளாம்பாக்கத்தில் கட்டப்படும் ரயில் நிலையம் இந்த வருட இறுதியில் பயன்பாட்டிற்கு வரும். அதற்கு இடையில் ரயில் நிலையம் பேருந்து நிலையம் இடையிலான பறக்கும் நடை பாலமும் கட்டி முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

ரயில் நிலையம் தமிழ்நாடு அரசின் செலவில் கட்டப்படம். தமிழ்நாடு அரசு கொடுக்கும் ரூ. 100 கோடி ரூபாயில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட உள்ளது. இதுவரை கோயம்பேடு வரை இயக்கப்பட்ட பேருந்துகள் இனி கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து முனையத்தில் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கிளாம்பாக்கத்தில் ரயில் நிலையம் கட்டும் பணி தமிழ்நாடு அரசு நிதியில் தொடங்கப்பட்டு உள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திற்கு மெட்ரோ சேவை விரிவுபடுத்தப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளார். சென்னை விமானநிலையத்தில் இருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை மெட்ரோ சேவையை நீட்டிக்க, ரூ,4,625 கோடி மதிப்பில் பெறப்பட்டு மத்திய அரசின் மூலதன பங்கீட்டு நிதிக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று பட்ஜெட்டில் அவர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார் . திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. பெரும்பாலும் இந்த வாரமே இதன் ரூட் மேப் உட்பட பல விவரங்கள் அடங்கிய திட்ட அறிக்கை வெளியாகும் என்கிறார்கள். மல்டி மாடல்; இப்படி மெட்ரோ, ரயில் நிலையம், பேருந்து நிலையம் எல்லாம் ஒரே இடத்தில் அடுத்தடுத்து அமைக்கப்பட உள்ளன. இதனால் கிளாம்பாக்கம் மல்டி மாடல் பேருந்து நிலையமாக மாற உள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The multi-modal bus stand will be transformed into a clambakum! Kalamakkam Central?


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->