டீ குடிக்க பணம் கேட்ட கணவன் ... கடைசியில் வாலிபர் எடுத்த விபரீத முடிவு!
The husband who asked for money to drink tea in the end, the young man made a terrible decision
டீ குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பெருங்கட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். 35 வயதான இவர், பெருங்கட்டூர் கிராமத்தில் நடைபெற்ற நாடகத்தை பார்ப்பதற்காக தனது மனைவி சுதாவுடன் சென்றுள்ளார் . அப்போது சுதாவிடம் டீ குடிக்க பணம் கேட்டதாகவும் , அதற்கு அவர் பணம் தராமல் மறுத்ததாகவும் தெரிகிறது . இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த நிலையில் இருந்து வந்த பிரகாஷ் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றுள்ளார்.
உடனடியாக இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் மற்றும் குடும்பத்தினர் அவரை மீட்டு பெருங்கட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து பிரகாசின் உடல் பிரேத பரிசோதனைக்காக செய்யாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து சுதா மோரணம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெகன்நாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.டீ குடிக்க மனைவி பணம் தர மறுத்ததால் கணவன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் திருவண்ணாமலை அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
The husband who asked for money to drink tea in the end, the young man made a terrible decision