முதல் முறையாக சென்னையில் நாளை மலர் கண்காட்சி தொடக்கம் .! - Seithipunal
Seithipunal


சென்னையில் முதல்முறையாக நாளை மலர் கண்காட்சி தொடங்கப்படுகிறது.

தமிழகத்தின் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு சென்னை கலைவாணர் அரங்கில் நாளை முதல் மலர் கண்காட்சி நடைபெறுகிறது.

தோட்டக்கலைத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த மலர் கண்காட்சியில் ஏராளமான வண்ண வண்ண மலர்கள் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனே போன்ற இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட வகைகளில் கண்ணை கவரும் அழகிய மலர்கள் கலைவாணர் அரங்கத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழக அரசு சார்பில் சென்னையில் மலர் கண்காட்சி நடைபெறுவது இதுவே முதல்முறையாகும்.

மேலும் இந்த மலர் காட்சி நாளை முதல் ஜூன் 5ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பொதுமக்கள் காலை 9 மணி முதல் மாலை 8 மணி வரை மலர் கண்காட்சியை பார்வையிட்டு கண்டுகளிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The flower exhibition starts tomorrow in Chennai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->