வயிற்றுவலியால் துடித்த 12 வயது சிறுமி - விசாரணையில் சிக்கிய தலைமையாசிரியர் கைது.! - Seithipunal
Seithipunal


கர்நாடகா மாநிலத்தில் உள்ள சிட்லகட்டா கிராமத்தில் இயங்கி வரும் அரசுப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ஒருவர், கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். 

இதனால், அவரது பெற்றோர் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்ததில், மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சம்பவம் தொடர்பாக சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது, சிறுமி அழுதபடியே பள்ளியின் தலைமை ஆசிரியர் பள்ளி அலுவலக அறையில் வைத்து அடிக்கடி பலாத்காரம் செய்து வந்ததாகவும், இதுதொடர்பாக வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியதாகவும் தெரிவித்துள்ளார். இதையடுத்து, சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அதன் படி போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து, தலைமை ஆசிரியர் வெங்கடேஷனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

teacher arrested for harassment case in karnataga


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->