தூத்துக்குடி: டீக்கடை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டத்தில் டீக்கடை உரிமையாளர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் செட்டிக்குறிச்சி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுரேஷ்(57). இவர் அதே பகுதியில் டீக்கடை ஒன்று நடத்தி வந்தார்.

இந்நிலையில் சுரேஷுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. மேலும் இவருக்கு கடன் பிரச்சனை இருந்ததால், மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.

இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சுரேஷ், அவரது கடையின் அருகே உள்ள கழிவறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கயத்தாறு போலீசார், உயிரிழந்த சுரேஷின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tea shop owner committed suicide by hanging himself in Thoothukudi


கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?Advertisement

கருத்துக் கணிப்பு

மக்கள் வரிப்பணத்தை எடுத்து கொடுத்துவிட்டு, மக்களையே ஓசில போறிங்க என்று அசிங்கப்படுத்தும் திமுக அமைச்சரின் பேச்சு?
Seithipunal