குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. டாஸ்மாக் நேரம் குறைப்பு.? - சென்னை உயர்நீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அரசு டாஸ்மாக்கின் கீழ் மது விற்பனை நடைபெற்று வருகிறது. இந்த மதுபான விற்பனையை அரசு மேற்கொண்டுள்ளது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் வருகிறது. அதற்கு விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு கள்ளச்சாராயம் விற்பனையை தடுப்பதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. 

இதனிடையே தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தமிழ் தரப்பில் இருந்தும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. 

அதன் காரணமாக தமிழக அரசு புதிய மதுபான கடைகளை திறக்காது என்றும் கடை திறக்கும் நேரம் குறைப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் தற்போது தமிழகத்தில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடைகள் விற்பனை குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மது விற்பனை நேரத்தை இனி பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை தமிழக அரசு மாற்றுவது குறித்து கேள்வி எழுப்பியது. இதையடுத்து தமிழக அரசு எதற்கு விரைவில் பதில் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac wineshop time will be possible to changed


கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தின் கல்வித்தரம், கட்டமைப்பு வசதிகள் எப்படி இருக்கு?




Seithipunal
--> -->