தமிழகம் முழுவதும் டாஸ்மாக் காலி மது பாட்டிலுக்கு ரூ10 திட்டம் - நாள் குறித்த சென்னை உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை, தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில், அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று, சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மது விற்பனையை டாஸ்மார்க் மூலம் தமிழக அரசே செய்து வருகிறது. மலைப்பிரதேசங்களான நீலகிரி உள்ளிட்ட பகுதிகளில் மது பாட்டில் காரணமாக வனவிலங்குகளுக்கும், இயற்கைக்கும் ஆபத்தான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இதனை தடுக்கும் பொருட்டு நீதிமன்ற உத்தரவுபடி, "10 ரூபாய் கூடுதலாக செலுத்தி மதுபானத்தை பெற்றுக் கொண்டு, பிறகு காலி பாட்டிலை திருப்பி கொடுக்கும்போது அந்த பத்து ரூபாய் வாடிக்கையாளர்களுக்கு ஒப்படைக்கப்படும்" என்ற ஒரு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தினால் என்ன? என்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம், இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.

ஆனால் தமிழக அரசு சார்பில், மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் பல சிக்கல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, காலி மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எப்படி அமல்படுத்தலாம் என்பது குறித்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், அதனை பரிசளித்து அறிக்கை அளிக்க இருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இது குறித்த அறிக்கையை தமிழக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, இந்த வழக்கில் அக்டோபர் 11ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் அறிவித்திருக்கிறார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TASMAC new Scheme Order chennai HC oct


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->