4 நாட்களுக்கு மதுக்கடைகள் மூடல்.! அதிரடியாக அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்.! - Seithipunal
Seithipunal


நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வரும் 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) முதல் வாக்குப்பதிவு நாளான 6-ந்தேதி நள்ளிரவு வரையில், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். மேலும், வாக்கு எண்ணிக்கை நாளானமே மாதம் 2-ந்தேதியும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு விடுத்துள்ள அறிக்கையில், :-

"நெல்லை மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் தேர்தலை முன்னிட்டு வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே மாதம் 2-ந்தேதியும் மதுபான சில்லறை கடைகள் மற்றும் அதனுடன் இணைந்த பார்களை அடைக்க வேண்டும்.

மேலும் எப்.எல்.-2 முதல் எப்.எல்.11 வரையிலான உரிமதலம் கொண்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும்.

இதேபோல், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் விடுத்துள்ள அறிக்கையில்,

"சட்டமன்ற பொதுத் தேர்தலையொட்டி வருகிற 4-ந்தேதி முதல் 6-ந்தேதி இரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான வருகிற மே மாதம் 2-ந்தேதியும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டு இருக்கும். எப்.எல்.-2 மற்றும் எப்.எல்.3 உரிமதலம் கொண்ட அனைத்து கடைகளும் மூடப்பட வேண்டும். இதில் எப்.எல்.6-க்கு விதிவிலக்காகும்.

இந்த காலகட்டத்தில் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு மது கடத்துதல், மதுபானத்தை பதுக்கி வைத்தல் உள்ளிட்டவை கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac leave in 2 district


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->