குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. இன்று முதல் 3 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. மாவட்ட ஆட்சியர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடையெழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரி மன்னனின் வீரம் கொடைத்தன்மை குறித்து சங்ககால தமிழ் இலக்கியங்களான எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு நூல்களில் ஏராளமான பாடல்கள் இடம் பெற்றுள்ளன.

கொடை வள்ளலின் மறு உருவமான கொல்லிமலையை ஆண்ட வல்வில் ஓரி மன்னனின் புகழை போற்றும் வகையில் கடந்த 1975 ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு அரசு சார்பில் வல்வில் ஓரிவிழா ஆகஸ்ட் 2, 3 ஆகிய 2 நாட்கள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான வல்வில் ஓரி விழா நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறுகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாளை மறுநாள் (ஆகஸ்ட் 3ஆம் தேதி) நாமக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் உமா அறிவித்துள்ளார்.

இந்த நிலையில் இந்த விழாவில் அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்கும் வகையில் இன்று முதல் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை கொல்லிமலையில் உள்ள செம்மேடு, செங்கரை மற்றும் சோளக்காடு ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் இதனை மீறி கள்ள சந்தையில் மதுபானம் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasmac closed 3days in kollimalai


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->