அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அவசரமாக மூடப்பட்ட மதுபான கடைகள்.! வெளியான முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் உரிய அனுமதியின்றி சட்டவிரோதமாக இயங்கி வரும் மது பார்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்க டாஸ்மாக் நிர்வாகம் மூலம் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உதவி மேலாளர் மற்றும் ஆய்வாளர் தலைமையிலான கண்காணிப்பு குழுவினர் மற்றும் காவல்துறையினர் அதிரடியாக பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்பொழுது பெரம்பலூர் வேப்பந்தட்டை, கிருஷ்ணாபுரம், வாலிகண்டபுரம், தழுதாழை, தொண்டமாந்துறை, பூலாம்பாடி கைகளத்தூர், விகளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பான வகையில் அனுமதி என்று 12 இடங்களில் மதுபான கடைகள் செயல்பட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பார்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

டாஸ்மாக், மதுபானக்கடை, seithipunal

இதைப்போலவே அரியலூர் மாவட்டத்திலும் திருமானூர், கயர்லாபாத், முடிகொண்டான் உள்ளிட்ட பகுதிகளில் அனுமதி இன்றி இயங்கி வந்த 14 மதுக்கடைகளை மற்றும் நான்கு பெட்டிக்கடைகளில் மதுபானங்கள் விற்பனை செய்து வரப்பட்டதை கண்டுபிடித்து பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இதையடுத்து, அந்த பகுதிக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் அதிகாரிகள் புகார் அளித்தனர். அதன்பேரில் 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tasmac close in ariyalur, perambalur


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->