தஞ்சை களிமேடு தேர் விபத்து - மநீம தலைவர் கமல்ஹாசன் இரங்கல்.! - Seithipunal
Seithipunal


தஞ்சாவூர் மாவட்டம் களிமேடு அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் வருடம் தோறும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.  இந்நிலையில் இந்த கோவிலில் 94 ஆவது ஆண்டு சித்திரைத் திருவிழா தேரோட்டம் நேற்று நள்ளிரவு தொடங்கி நடைபெற்று வந்தது.

அப்போது பூதலூர் சாலையில் களிமேடு என்ற பகுதியில் தேர்பவனி வந்து கொண்டிருந்த போது தேர் மீது  மின்சாரம் பாய்ந்தது. இதில், 10 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், அதற்கு 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த அவர்கள் உலகை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  

இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் "தஞ்சை களிமேடு தேர் திருவிழாவில் மின்சாரம் தாக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெருந்துயரத்தைத் தருகிறது. இதுபோன்ற கூடுகைகளில் விழா ஏர்பாட்டாளர்களுடன் மாவட்ட நிர்வாகம், காவல்துறை, உள்ளூர் நிர்வாகம் ஆகியோர் கூடுதல் அக்கறை எடுத்துக் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tanjore kamimedu festival accident MNM Kamal Haasan condolences


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->