7 மாவட்டங்களுக்கு கனமழை.. 9 மாவட்டங்களில் நல்ல மழை.. சென்னை வானிலை மையம் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் வெப்பச்சலனம் காரணமாக கோவை, ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. 

திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. 

தலைநகர் சென்னையை பொருத்தவரையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம் என்றும், அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி செல்சியசும், குறைந்த பட்ச வெப்ப நிலையாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம் என்றும் தெரிவித்துள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் பொருத்தவரையில் பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்துள்ளது. இதில் அரியலூர் மாவட்டம் செந்துறை, திருச்சி மாவட்டம் கோல்டன் பாறை பகுதிகளில் தலா 11 சென்டி மீட்டர் மழையும், திருச்சி, கரூர் மாவட்டம் மலம்பட்டி பகுதியில் 10 சென்டி மீட்டர் மழையும், திருச்சி மாவட்டம் லால்குடி, திருச்சி விமான நிலையம், திருச்சி மருங்காபுரி பகுதியில் தலா 7 செண்டி மீட்டர் மழையும், காஞ்சிபுரத்தில் 6 சென்டி மீட்டர் மழையும், நீலகிரி மாவட்டத்தின் கெட்டி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் சோளிங்கர், விருதுநகர், திருச்சி மாவட்டத்தின் துவாகுடி, பெரம்பலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆற்காடு பகுதியில் தலா 5 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது. 

ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜூன் 16-ஆம் தேதி வரை லட்சத்தீவு, கர்நாடக கடலோரப் பகுதி, தெற்கு மகாராஷ்டிரா பகுதி, மத்திய கிழக்கு வங்க கடல், வடக்கு அந்தமான் கடல், தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடலோரம், குஜராத் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், மேற்கூறிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu rain alert by Chennai Regional Meteorological center


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->