ஆண்களை எச்சரித்த தமிழக அரசு..! - Seithipunal
Seithipunal


 தமிழக அரசு மோட்டார் வாகன விதிகளில் திருத்தங்களை செய்து,  அதனை அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

பேருந்தில் பயணிக்கும் ஆண் பயணி, பெண்களை முறைத்துப்பார்த்தல், கூச்சலிடுதல், விசில் அடித்தல், கண் சிமிட்டுதல், பாலியல் ரீதியாக புண்படுத்தக்கூடிய சைகைகளைக் காட்டுதல் , பாடல் பாடுதல், வார்த்தைகளை உச்சரித்தல், புகைப்படங்கள் எடுத்தல்போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. 

நடத்துனர் எச்சரிக்கை அளித்தப் பின், புகாருக்குள்ளான பயணியை இறக்கிவிடலாம் அல்லது வழியில் உள்ள ஏதேனும் காவல் நிலையத்தில் ஒப்படைக்கலாம்.

பெண்கள் பேருந்தில் பயணிக்கும் போது, பயணத்தின் நோக்கம் குறித்து தேவையில்லாத கேள்விகள் கேட்கக்கூடாது. எந்தவொருவிதமான எரிச்சலையும்  பயணிகளுக்கு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. 

பேருந்தில் புகார் புத்தகத்தை கட்டாயமாக பராமரிக்க வேண்டும். போலீஸ் அதிகாரிகள் கேட்கும்போது அந்த புகார் புத்தகத்தை கொடுக்க வேண்டும். நடத்துனர் இல்லாத போது இவை ஓட்டுநரின் பொறுப்பு. என்று  தமிழக அரசு அரசிதழில் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamilnadu government warned mens


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->