#Breaking: இன்று 4,231 பேருக்கு கொரோனா உறுதி.. மாவட்ட வாரியாக மீண்டும் அதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கரோனா வைரஸின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் அதிகரித்து வரும் கரோனா பாதிப்பின் காரணமாக மக்கள் பெரும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். அரசின் சார்பாக கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று 1,22,350 ஆக உயர்ந்துள்ளது. பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 74,167 ஆக இருந்தது.. மேலும், மொத்த பலி எண்ணிக்கை 1,700 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், இன்று கரோனாவால் 4,231 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,26,581 ஆக உயர்ந்துள்ளது. இன்று 3,994 பேர் பூரண நலன் பெற்றதை அடுத்து, மொத்த பூரண நலன் பெற்றவர்களின் எண்ணிக்கை 78,161 ஆக உயர்ந்துள்ளது. இன்று 65 பேர் பலியானதை அடுத்து, மொத்த பலி எண்ணிக்கை 1,765 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியான பட்டியலில் சென்னையில் ஏற்கனவே 72,500 பேருக்கு கொரோனா உறுதியாகி இருந்தது. இன்று மேலும் 1,216 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் சென்னையின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 73,728 ஆக உயர்ந்துள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamilnadu corona virus update 9 July 2020


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->