ரூ.14 லட்சம் மதிப்பிலான தங்க கிரீடம்! தமிழக முதல்வரின் மனைவி காணிக்கை! - Seithipunal
Seithipunal


கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலுக்கு நேற்று முன்தினம் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலின் சென்று மூலவருக்கு தங்க கிரீடத்தை காணிக்கையாக செலுத்தினார். 

துர்கா ஸ்டாலின் இந்த கோவிலுக்கு அவருடைய சகோதரி ஜெயந்தி மற்றும் சில நெருங்கிய உறவினர்களுடன் நேற்று முன்தினம் காலை வந்திருந்தார். 

குருவாயூர் தேவஸ்வம் வாரியத்தின் தலைவர், கோவில் நிர்வாகி மற்றும் இணை நிர்வாகி ஆகியோர் ஸ்டாலினின் மனைவி மற்றும் அவர்களது உறவினர்களை வரவேற்றனர். 

இதனை தொடர்ந்து அவர் ஸ்ரீ குருவாயூரப்பனை வழிபட்டார். பின்னர் 14 லட்சம் மதிப்பிலான 32 சவரன் எடையுள்ள தங்க கிரீடத்தை மூலவருக்கு காணிக்கையாக செலுத்தினார். 

உச்ச கால பூஜைக்கு பிறகு அவர், கோவில் கருவறை திறக்கப்படும் வரை காத்திருந்து தங்க கிரீடத்துடன் அருள் பாவித்த ஸ்ரீ கிருஷ்ணரை தரிசனம் செய்து மகிழ்ந்தார். 

மேலும், அவர் சந்தனம் அரைப்பதற்கான இயந்திரத்தையும் காணிக்கையாக வழங்கி உள்ளார். அவருக்கு சிறப்பு பிரசாதத்தை கோவில் நிர்வாகத்தினர் வழங்கி வழி அனுப்பி வைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil Nadu Chief Minister wife gave gold crown


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->