விழுப்புரம் சிறுவன் பலியான விவகாரம்.! மத்திய அரசுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பிய உச்சநீதிமன்றம்.! - Seithipunal
Seithipunal


தேசிய அளவில் பட்டினிச்சாவை தடுப்பதற்காக திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் சமுதாய உணவகங்களை அமைத்து, பட்டினி சாவுகளை தடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிபதிகள் தெரிவிக்கையில்,

"விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஐந்து வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளார். அந்த சிறுவனின் உடல் கூறு ஆய்வு அறிக்கையில், அவரின் குடலில் உணவு இல்லாததால், பட்டினி கிடந்து இறந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் நமது நாட்டில் பட்டினி சாவே இல்லை என்று எப்படிக் கூற முடியும்? நமது நாட்டில் அண்மையில் பட்டினி இறப்புகள் தொடர்பாக மாநில அரசுகள் தரும் தரவுகளை, மத்திய அரசு சேகரிக்க வேண்டும். அதனை ஆய்வு செய்து அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பட்டினியால் இறப்பதை தடுப்பதற்காக தேசிய அளவில் மத்திய அரசு திட்டங்களை உருவாக்க வேண்டும். மேலும், மாநிலங்களுக்கு கூடுதல் உணவு தானியங்கள் வழங்க முன்வர வேண்டும். இதுபோன்ற நடவடிக்கைகள்தான் மாநில அரசுகள் சமுதாய உணவகங்களை உருவாக்க வழிவகுக்கும்" என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supreme court say about starvation deads issue


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->