மாவட்ட ஆட்சியர் தலைமையில் கரும்பு கொள்முதல்., தமிழக அரசு உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பரிசு தொகுப்புக்கான கரும்பு கொள்முதல் செய்ய மாவட்டம் மற்றும் வட்டாரம் வாரியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் வேளாண் துறை இணை இயக்குநர், கூட்டுறவு துறை இணைப்பதிவாளர் ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று நுகர் பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் அடங்கிய குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை பொறுத்தவரை மண்டல கூடுதல் பதிவாளர் மற்றும் உதவி ஆணையர் கொண்ட குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது. அதேபோன்று உதவி ஆணையர் மற்றும் வேளாண் அலுவலர் கொண்ட குழுவையும் தமிழக அரசு அமைந்துள்ளது. வட்டார அளவில் வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க மேலாண் இயக்குனர் மேலாண் அலுவலர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது

பொங்கல் தொகுப்பில் முழு நீள கரும்பை கூட்டுறவு சங்கத்தின் மூலம் விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க கட்டுப்பாட்டு மையம் அமைக்க வேண்டும், கரும்பை வேளாண் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் மூலம் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sugarcane Procurement under District Collectors


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->