விவசாய நிலத்தில் தோன்றிய திடீர் பள்ளம்.! மன்னர்களின் ரகசிய இடமா.?! வருவாய்த்துறை ஆராய்ச்சி.!  - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே கருவலூர் என்ற கிராமத்தில் மிக மிக பழமை வாய்ந்த வேணுகோபால பெருமாள் கோவிலுக்கு சொந்தமாக 3 ஏக்கர் நிலம் இருக்கின்றது. அந்த ஊரைச் சேர்ந்த மக்கள் அதில் விவசாயம் செய்வார்கள். இந்த முறையும் அதுபோல விவசாயம் செய்ய கடந்த திங்கள் கிழமையில் நடவு பணியானது நடந்துள்ளது. 

அதன் பிறகு நிலத்தில் நடவு பணிகள் மேற்கொள்ள ஏற்பாடுகள் நடந்துகொண்டிருந்தது. ஆனால், இன்று திடீரென அந்த நிலத்தில் 12 அடி ஆழம், 2 அடி அகலமும் கொண்ட பள்ளம் ஒன்று தென்பட்டுள்ளது. திடீரென விவசாயம் செய்யும் நிலத்தின் பள்ளம் ஏற்பட்டது குறித்து அந்த ஊர் முழுவதும் தகவல் பரவ மக்கள் ஓடி வந்த கூட்டம் கூட்டமாக பார்வையிட துவங்கியுள்ளனர். 

பழங்காலத்தில் வாழ்ந்த ராஜாக்களின் சுரங்கப் பாதையாக அது இருக்கலாம் என்று அவர்கள் பேசிக்கொள்கின்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய் துறை அதிகாரிகள் அந்த பள்ளத்தை சோதனை செய்தனர். 

அப்பொழுது அவர்கள் இது தானியம் சேமிக்கும் கிடங்காக இருக்கலாம். இது போல ஏற்கனவே சென்னிமலை பகுதியிலும் ஒரு பள்ளம் இருந்தது. அதுதனிய கிடங்காக பயன்படுத்தப்பட்டு வந்ததாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்ததாக தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sudden groove in avinasi


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->