அன்றைக்கே சொன்னனே.. கொந்தளிக்கும் ஸ்டாலின்.. பகிரங்க எச்சரிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து வந்தது. கொரோனா பரவலை சமாளிக்க அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி அறிவித்து, கொரோனா தடுப்பு பணிகளை அடுத்தடுத்து தீவிரப்படுத்தி அறிவித்தது. 

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்திருந்த நிலையில், அரசு கொரோனா மரணங்களை மறைத்து வருவதாக குற்றசாட்டு எழுந்தது. இந்த விஷயத்தில் திமுக உறுதியாக இருந்து, தமிழக அரசின் மீது தொடர் குற்றசாட்டுகளை வைத்து வந்தது. 

இந்த நிலையில், கொரோனா மரணங்கள் 444 விடுக்கப்பட்டு விட்டது என்றும், இந்த மரணங்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளது என்றும் தமிழக சுகாதாரத்துறை நேற்று அறிவித்து இருந்தது. மேலும், கொரோனா மரணங்கள் தொடர்பாக ஆய்வு செய்ய குழு அளிக்கப்பட்டதாகவும், இந்த குழுக்களின் அறிக்கைபடி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

தற்போது திமுக தலைவர் முக.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது குறித்த வீடியோவில், " நான் துவக்கத்திலேயே தமிழக அரசு கொரோனா மரணங்களை மறைப்பதாக தெரிவித்து இருந்தேன். ஆனால், அரசு நான் அரசியல் விமர்சனம் செய்வதாக தெரிவித்தது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மன்னிப்பு கேட்க வேண்டும் " என்று கூறியுள்ளார். 

ஆனால், கொரோனா மரணங்கள் விவகாரத்தில் இதுபோன்ற பல சர்ச்சைகள் உலக நாடுகளை சந்திக்க வைத்துள்ளது என்றும், சீனாவில் கூட இறுதியாக ஆயிரத்திற்கும் அதிகமான மரணங்கள் கொரோனாவால் ஏற்பட்டது என்று சேர்க்கப்பட்டது என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Stalin angry about TN Govt activity corona virus death quantity


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal