ரஜினிகாந்த் இலங்கை விசா விவகாரம்.. பரபரப்பு அறிவிப்பு விடுத்த இலங்கை.!! - Seithipunal
Seithipunal


இலங்கை நாட்டில் உள்ள வடக்கு மாகாண சபையுடைய முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தமிழகத்திற்கு வருகை தந்திருந்தார். இந்த நேரத்தில், விக்னேஸ்வரன் நடிகர் ரஜினியை சந்தித்து பேசினார். 

இந்த நேரத்தில், விக்னேஸ்வரன் நடிகர் ரஜினிகாந்தை இலங்கைக்கு வரக்கூறி அழைப்பு விடுத்து சென்றார். இது குறித்த தகவல்கள் வெளியான நிலையில், இணையத்தில் ரஜினிகாந்த் இலங்கைக்கு சென்றவுடன் இங்கு தான் செல்வார் என்ற செய்தியும் அதிகமாக உலா வந்தது. 

இந்த தருணத்தில், நடிகர் ரஜினிகாந்த் யாழ்ப்பாணத்திற்கு வருகை தர உள்ளதாகவும், அவருக்கு விசா வழங்க இயலாது என்றும் இலங்கை அரசு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. 

இது தொடர்பாக அங்குள்ள சிங்கள நாளிதழின் மூலமாக வெளியிடப்பட்ட செய்தியில், அரசியல் நடவடிக்கைக்கு ரஜினி இலங்கை வருவதாகவும், இதனால் விசா வழங்க முடியாது என இலங்கை அரசு தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. 

இந்த தகவல் இணையத்தில் பெரும் வைரலான நிலையில், இது தொடர்பான தகவலை கண்ட இலங்கை அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் வருவதற்கு விசா வழங்க முடியாது என்று இலங்கை அரசின் சார்பாக அறிவிக்கப்படவில்லை. அது தவறான தகவல் என்று தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

srilankan govt announce about visa for rajinikanth


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal