சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம் - முழு விவரம் இதோ.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதத்தில், தமிழகத்தில் இருந்து சபரிமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் செல்வார்கள். அவர்களின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு போக்குவரத்து கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "இன்று (நவம்பர் 16) முதல் ஜனவரி 16 வரையில் சென்னை, திருச்சி, மதுரை, கடலூர், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களில் இருந்து பம்பைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

குளிர்சாதன வசதி கொண்ட சொகுசு பேருந்துகள் மற்றும் சாதரண பேருந்துகள் உள்ளிட்டவை இயக்கப்பட உள்ளன. 27.12.2023 முதல் 30.12.2023 வரை சபரிமலை நடை சாத்தப்பட்டு இருக்கும்.

அதனால், 26.12.2023 முதல் 29.12.2023 வரையில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாது. அதே போன்று மொத்தமாக குழுவாக செல்லும் பக்தர்களுக்கு அரசு சிறப்பு பேருந்து வாடகைக்கும் விடப்படும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

special bus run to sabrimalai from today


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->