பொங்கல் சிறப்பு ரயிலை அறிவித்தது தெற்கு ரயில்வே.. முழு விவரம் இதோ..!! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பயன்பாட்டிற்காக சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து தென் மாவட்டங்களுக்கு 5 சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் ஜன.12ம் தேதி இரவு 9:00 மணிக்கு தாம்பரத்திலிருந்து புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 9:00 மணிக்கு திருநெல்வேலி சென்று அடைகிறது.

திருநெல்வேலியிலிருந்து ஜன.13ம் தேதி மதியம் 1:00 புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. 

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ஜன.13ம் தேதி இரவு 7:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:10 மணிக்கு நாகர்கோயிலை சென்றடைகிறது.

நாகர்கோவிலில் இருந்து ஜன.16ம் தேதி மாலை 5:10 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 7:30 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடைகிறது. 

கேரள மாநிலம் கொச்சிவேலியில் இருந்து ஜன.17ம் தேதி காலை 11:40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 6:20 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து ஜன.18ம் தேதி காலை 10:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:20 மணிக்கு கொச்சிவேலியை சென்று அடைகிறது. 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஜன.12ம் தேதி இரவு 11:20 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 11:30 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடைகிறது.

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து ஜன.13ம் தேதி மதியம் 2:50 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் அதிகாலை 3:10 மணிக்கு எர்ணாகுளம் ரயில் நிலையத்தை சென்றடைகிறது.

தாம்பரத்தில் இருந்து ஜன.16ம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9:00 மணிக்கு திருநெல்வேலி சென்றுடைகிறது.

திருநெல்வேலியில் இருந்து ஜன.17ம் தேதி இரவு 10:30 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9:00 மணிக்கு தாம்பரம் வந்தடைகிறது.

இந்த அனைத்து சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் முன்பதிவு துவங்கும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Southern Railway Announced Pongal Special Train


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->