தம்பியை அடித்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட அக்கா.! இதெல்லாம் ஒரு காரணமா.?!
Sister suicide for reason to slap her brother
சென்னை மாநகர பகுதியில் உள்ள மதுரவாயல் சீமாத்தம்மன் நகரைச் சேர்ந்தவர் முருகன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவியும் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு மகளும், 6 வயதில் ஒரு மகனும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர்.

இந்த நிலையில் தேர்வு எழுதி முடித்த மாணவி வீட்டிற்கு வந்த பிறகு தனது தம்பி சரியாக படிக்காததால் அவரை அடித்துள்ளார். இதன் பின்னர் மாணவி தனது தந்தைக்கு போன் செய்து, தம்பி சரியாக படிக்கவில்லை என்றும், அதனால் தான் அவரை அடித்ததாகவும் கூறியுள்ளார். வேலை முடிந்து வீட்டுக்கு வந்த முருகன், மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதை பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்தார்.
இதனை தொடர்ந்து உடனடியாக சிறுமியை மீட்டு தனியார் மருத்துவமனையில் பரிசோதித்தபோது சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்த பிறகு, தனது தம்பியை அடித்துவிட்டதால் தனது அம்மாவுக்கு பயந்து மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
English Summary
Sister suicide for reason to slap her brother