சோளிங்கர் மலைக்கோவிலில் ரோப்கார் வசதி: முதல்வர் தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


ராணிப்பேட்டை, சோளிங்கரில் உள்ள பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலுக்கு ஆந்திரா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். 

இந்த கோவிலில் 1305 படிகள் உள்ள நிலையில் முதியவர்கள், மாற்று திறனாளிகள் மலை மீது ஏறிச் சென்று தரிசிக்க முடியாமல் சிரமம் அடைகின்றனர். 

அவர்கள் எளிதில் மலைக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்யும் விதமாக ரோப்கார் வசதி ஏற்படுத்தி தருமாறு பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதன் அடிப்படையில் தமிழக அரசு ரூ. 9.50 கோடி மதிப்பில் ரோப் கார் அமைக்கும் பணியில் ஈடுபட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சோதனை ஓட்டமும் நடைபெற்றது. 

இந்நிலையில் ரோப் கார் பணிகள் அனைத்தும் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை காணொளி மூலம் தொடங்கி வைக்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sholingur temple rope car facility


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->