மருத்துவமனையில் அதிர்ச்சி: ஓசூரில் சிகிச்சை எடுத்த பெண் உயிரிழந்த திடுக்கிடும் சம்பவம்...! காரணம் என்ன...?
Shocking incident hospital woman undergoing treatment Hosur died What reason
கிருஷ்ணகிரியில் ஓசூர் ராம்நகரை சேர்ந்த கூலித்தொழிலாளியான இம்ரான் என்பவர். இவரது மனைவி 35 வயதான ரேஷ்மா. கடந்த 20 நாட்களுக்கு முன்பு, ரேஷ்மாவின் அக்கா மகளுக்கு ஓசூர் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
அங்கு தாய்-குழந்தையை கவனிப்பதற்காக ரேஷ்மா மருத்துவமனையில் தங்கி வந்தார்.இதில் நேற்று காலை ரேஷ்மாவுக்கு திடீரென கால் வலி ஏற்பட்டது. அதற்காக அவர் மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று, வலி நிவாரண ஊசி போட்டுக் கொண்டார்.

சில நேரங்களில், கழிவறைக்கு சென்ற அவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனே அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடர்ந்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த தகவலறிந்து வந்த ஓசூர் டவுன் காவலர்கள், உறவினர்களுடன் பேசித் தணிவு ஏற்படுத்தினர். இதைத் தொடர்ந்து, ரேஷ்மாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Shocking incident hospital woman undergoing treatment Hosur died What reason