செந்தில்பாலாஜிக்கு பின்னடைவு! உச்சநீதிமன்றம் அதிரடி! அமலாக்கத்துறையின் குடுமிப்பிடி! - Seithipunal
Seithipunal


நீதிமன்ற காவல் என்பது ஒருவரை உடல் ரீதியாக முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பது ஆகும். மாறாக சம்பந்தப்பட்ட நபரை மருத்துவமனையிலோ அல்லது சிறையில் சென்று விசாரிப்பது அல்ல என்று, செந்தில் பாலாஜி வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.

மேலும், ஊழல், பொதுமக்கள் பணத்தை கையாடல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் செந்தில் பாலாஜி மீது உள்ளது என்றும், மருத்துவ சிகிச்சையின்போது நீதிமன்றக் காவலில் உள்ள காலத்தை விசாரணை காலமாக கருதக்கூடாது என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் உச்ச நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதம் வைத்ததது.

அமலாக்கத்துறை தனது வாதத்தை நிறைவு செய்த நிலையில், செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்வது மிக மிக முக்கியம், அவசியம் என்று, உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி தற்போது இதய அறுவை சிகிச்சை முடிந்து, புழல் சிறையில் உள்ள மருத்துவமனையில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji case ED SC Case aug2


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->