செந்தில்பாலாஜி விடுதலை, மேகலா மனு தள்ளுபடி - நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு வழக்கில், இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பண மோசடி மற்றும் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்க துறையினர் கைது செய்தனர்.

அப்போது அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு இருதய அறுவை சிகிச்சையும் நடந்து முடிந்துள்ளது. 

தற்போது நீதிமன்ற காவலில் உள்ள செந்தில் பாலாஜியை, சட்ட விரோதமாக அமலாக்கத்துறை கைது செய்ததாக, அவரின் மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு பல்வேறு கட்ட விசாரணைகள் முடிந்த நிலையில், சற்று முன்பு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வில் வழங்கப்பட்ட இந்த தீர்ப்பு, மாறுபட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது.

இதில் நீதிபதி நிஷா பானு, செந்தில் பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமானது என்று கூறி, அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.

நீதிபதி பரத சக்கரவர்த்தி அவர்கள், செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த மனுவை ஏற்றுக் கொள்ள முடியாது. இதனை தள்ளுபடி செய்வதாக தீர்ப்பளித்துள்ளார். 

இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கி இருப்பதால், இந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்படும்.

இது குறித்து அறிவிப்பு இன்னும் சில நிமிடங்களில் வெளியாகும் என்று தெரிய வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Senthilbalaji Case Chennai HC Different Judgement


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->