விபத்தில் சிக்கிய குடும்பம்..வேடிக்கை பார்த்த கூட்டம்.. தமிழக அமைச்சரும் சேர்ந்து செய்த காரியம்.!  - Seithipunal
Seithipunal


அமைச்சர் செங்கோட்டையன் கோபி அருகே விபத்தில் சிக்கிய குடும்பத்தினரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார் .

ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் கோபிசெட்டிபாளையம் அருகே கிருஷ்ணன் என்பவர், தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையுடன் ஈரோடு சென்று கொண்டிருந்துள்ளார்.

அப்பொழுது தாசம்பாளையம் அருகே வந்து கொண்டிருந்தபோது, எதிரே வந்த லாரியின் மீது மோதி திடீரென விபத்துக்கு ஆளானார். இதன் காரணமாக அங்கிருந்த மக்கள் உடனடியாக 108 க்கு அழைத்து ஆம்புலன்ஸ் வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு அந்த வழியாக சென்ற பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், விபத்தை கண்டவுடன் உடனடியாக இறங்கி அவர்களை மீட்டு மருத்துவமனையில் கொண்டு சென்று அனுமதிக்க வழிவகை செய்தார்.

தனது பாதுகாப்பிற்கு வந்த மற்றொரு காரின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தார். அத்துடன் உரிய மருத்துவரிடம் உடனடியாக சிகிச்சை நடத்தக்கோரி தெரிவித்து விட்டு அங்கிருந்து புறப்பட்டார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

sengottaiyan minister helps to accident family in erode


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal