காட்டு மாடுடன் செல்ஃபி எடுக்கும் இளைஞர்கள்..! காத்திருக்கும் ஆபத்து..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின், நீலகிரி மாவட்டத்தில் காட்டு மாடுடன் செல்ஃபி எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில தினங்கள்  பெய்த கனமழையால் குன்னூர்  சாலை ஓரங்களில் பச்சைபசேல் என்று புற்கள் அதிகளவில் வளர்ந்துள்ளதால் இதனை சாப்பிட அருகில் உள்ள வனப்பகுதிகளில் இருந்து காட்டு மாடுகள் அதிகளவில் சாலையில் நடமாடி வருகிறது.  

இந்த நிலையில், சாலையோரம் மேய்ந்து கொண்டிருக்கும் காட்டு மாடுடன் சிலர் செஃல்பி எடுத்து வருகிறார்கள். சாதுவாகக் காட்சியளித்தாலும் காட்டு மாடுகள் எப்போது வேண்டுமானாலும் மனிதர்களைத் தாக்கும் குணம் கொண்டது என்றும், அவ்வாறு தாக்கினால் உயிர் பிழைப்பது அரிது என்றும் எச்சரிக்கின்றனர் வனஉயிரின ஆர்வலர்கள்.  

எனவே இந்த மாதிரி ஆபத்தை உணராமல் படம் எடுப்பவர்கள் மீது வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

selfie with forest bull


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->